• Apr 14 2026

மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக விசேட பேருந்து, ரயில் சேவைகள்

Chithra / Apr 14th 2026, 6:36 pm
image

சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் அறிவித்துள்ளனர்.


அதன்படி, இன்று (14) பயணிகளின் தேவைக்கேற்ப தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையான நேர அட்டவணையின்படி பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.


பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டு காலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள், பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை, நாளை (15) நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இன்றைய தினம் (14) மாலை வேளையிலும் தனியார் பேருந்து சேவைகளில் கணிசமான வீழ்ச்சி நிலவும் எனத் தெரிவித்தார்.


சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால் இந்தத் தற்காலிக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை (16) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக விசேட பேருந்து, ரயில் சேவைகள் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் அறிவித்துள்ளனர்.அதன்படி, இன்று (14) பயணிகளின் தேவைக்கேற்ப தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையான நேர அட்டவணையின்படி பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு காலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள், பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, நாளை (15) நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இன்றைய தினம் (14) மாலை வேளையிலும் தனியார் பேருந்து சேவைகளில் கணிசமான வீழ்ச்சி நிலவும் எனத் தெரிவித்தார்.சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால் இந்தத் தற்காலிக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை (16) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement