தலவாக்கலை பகுதியில் உள்ள சென் கிளையார் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள மாணா பற்றைக்கு விஷமிகள் தீ வைத்து உள்ளனர்.
அதன் காரணமாக அப் பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இன்று காலை வேளையில் இந்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென் கிளையார் நீர் வீழ்ச்சியின் எழில் கொஞ்சும் தோற்றம் மங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப் பகுதியில் உள்ள அனைத்து இயற்கை காட்சிகளை பார்க்க உள்நாட்டு வெளி நாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் வந்து ரசித்து செல்கின்றனர்.
இவ்வாறான இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பாரிய தீ பரவல் காரணமாக இயற்கை காட்சிகளை அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக மத்திய மலைநாட்டில் பல்வேறு பகுதிகளில் வன பகுதியில் தீ வைப்பது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு சட்ட விரோதமாக தீ வைப்பதினால் நீர் ஊற்றுகள் வன ஜீவராசிகள் அழிவடைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென் கிளையார் நீர் வீழ்ச்சி பகுதியில் பாரிய தீ பரவல் தலவாக்கலை பகுதியில் உள்ள சென் கிளையார் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள மாணா பற்றைக்கு விஷமிகள் தீ வைத்து உள்ளனர்.அதன் காரணமாக அப் பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.இன்று காலை வேளையில் இந்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சென் கிளையார் நீர் வீழ்ச்சியின் எழில் கொஞ்சும் தோற்றம் மங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இப் பகுதியில் உள்ள அனைத்து இயற்கை காட்சிகளை பார்க்க உள்நாட்டு வெளி நாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் வந்து ரசித்து செல்கின்றனர்.இவ்வாறான இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பாரிய தீ பரவல் காரணமாக இயற்கை காட்சிகளை அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக மத்திய மலைநாட்டில் பல்வேறு பகுதிகளில் வன பகுதியில் தீ வைப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு சட்ட விரோதமாக தீ வைப்பதினால் நீர் ஊற்றுகள் வன ஜீவராசிகள் அழிவடைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.