• Sep 20 2024

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு!

Tamil nila / Jul 28th 2024, 10:59 pm
image

Advertisement

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இவற்றில், 2022 ஆம் ஆண்டில் அந்த இடங்களுக்குச் சென்ற மொத்த சுற்றுலாப் பயணிகளில் 19.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாவர்.

2023 ஆம் ஆண்டில், 27.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததோடு 2024 இல் 40% வீதமானோர் வருகை தந்துள்ளனர்.

இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளை தயாரித்து,பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அதற்கான சட்டத் திருத்தங்களைச் தயாரித்து வருகிறோம்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில், 2500 ஹெக்டெயார் நிலப்பரப்பு கொண்ட கல்லோயா சுற்றுச்சூழல் பூங்கா புதிய சுற்றுலாத்தளமாக பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது.

மேலும், தற்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள குடவா தொரண எல்ல நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகளுக்காக தகவல் மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில், நக்கிள்ஸ் சுற்றுலா வனப்பகுதியின் இழுக்கும்புர பகுதியில் மாணிகல வன விடுதி கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

13 வருடங்களின் பின்னர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வனவிலங்கு குற்றங்களை தடுக்கும் வகையில், தாவரங்கள் மற்றும் விருட்சங்கள் சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர்களில் 40% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைக் குறிப்பிட்டார்.மேலும் உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024ல், வனவளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அதன்படி, 2022ஆம் ஆண்டு வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 289,405 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 444,053 ஆகவும் பதிவாகியுள்ளது.2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 364 521 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.இவற்றில், 2022 ஆம் ஆண்டில் அந்த இடங்களுக்குச் சென்ற மொத்த சுற்றுலாப் பயணிகளில் 19.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாவர்.2023 ஆம் ஆண்டில், 27.8% வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததோடு 2024 இல் 40% வீதமானோர் வருகை தந்துள்ளனர்.இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒழுங்கு விதிகளை தயாரித்து,பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அதற்கான சட்டத் திருத்தங்களைச் தயாரித்து வருகிறோம்.அதன்படி, 2023 ஆம் ஆண்டில், 2500 ஹெக்டெயார் நிலப்பரப்பு கொண்ட கல்லோயா சுற்றுச்சூழல் பூங்கா புதிய சுற்றுலாத்தளமாக பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது.மேலும், தற்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள குடவா தொரண எல்ல நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகளுக்காக தகவல் மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.மேலும், 2024 ஆம் ஆண்டில், நக்கிள்ஸ் சுற்றுலா வனப்பகுதியின் இழுக்கும்புர பகுதியில் மாணிகல வன விடுதி கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.13 வருடங்களின் பின்னர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.வனவிலங்கு குற்றங்களை தடுக்கும் வகையில், தாவரங்கள் மற்றும் விருட்சங்கள் சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement