• Nov 22 2024

தென்கொரியாவில் அதிகரிக்கும் வெப்ப நோய்கள்- மூன்று நாளில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Tamil nila / Jul 28th 2024, 10:29 pm
image

தென்கொரியாவில் மூன்று நாள்களில் 100க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

பருவமழைக் காலம் விடைபெற்ற பின்னர் தென்கொரியாவில் வெயில் கொளுத்தும் நாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான சூடு காரணமாக அதனையொட்டிய நோய்கள் அங்கு பரவி வருகின்றன.

நிலைமையை விளக்க, கொரிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகவை கடந்த வெள்ளிக்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுடன் 124 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவசர சிகிச்சை நிலையங்களுடன் கூடிய 507 மருத்துவ நிலையங்கள் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, ஜூலை 24ஆம் திகதி மட்டும் 55 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாகவும் அது கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் வெப்பம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளை முகவைக் கண்காணித்து வருகிறது. இதுவரை கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் 16.3 விழுக்காடு ஜூலை 22 தொடங்கிய மூன்று நாள்களில் பதிவாயின.

மே 20ஆம் திகதி முதல் 759 நோயாளிகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாக முகவை கூறியது.

கடந்த வாரம் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தில் பதிவானதைக் காட்டிலும் 3.5 சதவீதம் அதிகம்.

ஜூலை 15 முதல் ஜூலை 17 வரையில் வெப்பம் தொடர்பான நோய்களுடன் 35 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 78.7 விழுக்காட்டினர் ஆண்கள். அவர்களில் 29.5 விழுக்காட்டினர் 65 வயதைக் கடந்தவர்கள்.

11.1 சதவீத்த்தினர் 20களின் வயதில் உள்ளவர்கள் என்றும் 13.2 சதவீத்த்தனர் 30களில் உள்ளவர்கள் என்றும் முகவை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

ஜூலை 24ஆம் திகதி பகல்நேரத்தில் பதிவான சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒருசில இடங்களில் மட்டும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.

தென்கொரியாவில் அதிகரிக்கும் வெப்ப நோய்கள்- மூன்று நாளில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு தென்கொரியாவில் மூன்று நாள்களில் 100க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.பருவமழைக் காலம் விடைபெற்ற பின்னர் தென்கொரியாவில் வெயில் கொளுத்தும் நாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான சூடு காரணமாக அதனையொட்டிய நோய்கள் அங்கு பரவி வருகின்றன.நிலைமையை விளக்க, கொரிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகவை கடந்த வெள்ளிக்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்டது.ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுடன் 124 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவசர சிகிச்சை நிலையங்களுடன் கூடிய 507 மருத்துவ நிலையங்கள் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, ஜூலை 24ஆம் திகதி மட்டும் 55 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாகவும் அது கூறியது.இந்த ஆண்டின் தொடக்கம் முதல் வெப்பம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளை முகவைக் கண்காணித்து வருகிறது. இதுவரை கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் 16.3 விழுக்காடு ஜூலை 22 தொடங்கிய மூன்று நாள்களில் பதிவாயின.மே 20ஆம் திகதி முதல் 759 நோயாளிகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாக முகவை கூறியது.கடந்த வாரம் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தில் பதிவானதைக் காட்டிலும் 3.5 சதவீதம் அதிகம்.ஜூலை 15 முதல் ஜூலை 17 வரையில் வெப்பம் தொடர்பான நோய்களுடன் 35 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.அத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 78.7 விழுக்காட்டினர் ஆண்கள். அவர்களில் 29.5 விழுக்காட்டினர் 65 வயதைக் கடந்தவர்கள்.11.1 சதவீத்த்தினர் 20களின் வயதில் உள்ளவர்கள் என்றும் 13.2 சதவீத்த்தனர் 30களில் உள்ளவர்கள் என்றும் முகவை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.ஜூலை 24ஆம் திகதி பகல்நேரத்தில் பதிவான சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒருசில இடங்களில் மட்டும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.

Advertisement

Advertisement

Advertisement