அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (19) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், தொழிற்சங்கங்களை நசுக்கும் வேலைத்திட்டத்தை நிறுத்தவும்,
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உரிய கோரிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏனைய அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை: கொழும்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் களமிறங்கும் தொழிற்சங்கங்கள் அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.குறித்த போராட்டமானது, இன்று (19) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், தொழிற்சங்கங்களை நசுக்கும் வேலைத்திட்டத்தை நிறுத்தவும்,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, உரிய கோரிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஏனைய அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க வலியுறுத்தியுள்ளார்.