• Oct 06 2024

ஈரான் தேர்தலில் மசூத் முன்ன‌ணியில் உள்ளார்.

Tharun / Jul 6th 2024, 2:59 pm
image

Advertisement

ஈரானில் வெள்ளிக்கிழமை இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது,  இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் மிகக் குறைந்த  வாக்குகள் பதிவாகி உள்ளது.

 அரச  தொலைக்காட்சியில் ஈரானின் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப முடிவுகள், சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன், கடும்போக்குவாதியான சயீத் ஜலிலியை விட சற்று முன்னிலையில் இருப்பதைக் காட்டியது.

ஈரானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் மற்றும் கொள்கைவாதி சயீத் ஜலிலி ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் மொத்தம் 58,638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் முடிவில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அடுத்த ஈரானிய ஜனாதிபதியாக இருப்பார்.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நடமாடும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

 ஜூன் 28 அன்று நடைபெற்ற தேர்தலின் முதல் சுற்றில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர், ஆனால் எவரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை, இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தபட்டது.

ஈரான் தேர்தலில் மசூத் முன்ன‌ணியில் உள்ளார். ஈரானில் வெள்ளிக்கிழமை இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது,  இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் மிகக் குறைந்த  வாக்குகள் பதிவாகி உள்ளது. அரச  தொலைக்காட்சியில் ஈரானின் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப முடிவுகள், சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன், கடும்போக்குவாதியான சயீத் ஜலிலியை விட சற்று முன்னிலையில் இருப்பதைக் காட்டியது.ஈரானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் மற்றும் கொள்கைவாதி சயீத் ஜலிலி ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் மொத்தம் 58,638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் முடிவில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அடுத்த ஈரானிய ஜனாதிபதியாக இருப்பார்.ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நடமாடும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே தனது வாக்கை பதிவு செய்தார். ஜூன் 28 அன்று நடைபெற்ற தேர்தலின் முதல் சுற்றில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர், ஆனால் எவரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை, இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தபட்டது.

Advertisement

Advertisement

Advertisement