• Nov 23 2024

மத்தள சர்வதேச விமான நிலையம் ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு?

Chithra / Dec 6th 2023, 1:33 pm
image

 

ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது

மேலும் இந்த திட்டத்தினூடாக ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் எனவும் துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும், புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மத்தள சர்வதேச விமான நிலையம் ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு  ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார்.அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளதுமேலும் இந்த திட்டத்தினூடாக ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் எனவும் துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.மத்தள சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும், புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement