• Jan 30 2025

மட்டு மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு..!

Sharmi / Jan 28th 2025, 8:39 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுக்குமான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் க.கலாரஞ்சினி உட்பட திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்களின் தேவையினை முழுமையாக நிறைவேற்றுவதாக இருப்பதுடன் மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படாமல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள்,வைத்தியசாலையின் பரப்பளவினை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் எம்ஆர்ஐ ஸ்கனர் உட்பட அவசியமான இயந்திரங்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில் அவசர தேவை கருதி அவற்றினை முன்னிலை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உட்பட அதன் செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் மேலும் வினைத்திறனாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது மாநகரசபையின் ஆணையாளரினால் உறுதியளிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பினையும் இதன்போது கோரியிருந்தார்.

மழை காலங்களில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொது அமைப்புகளும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.




மட்டு மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு. மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுக்குமான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் க.கலாரஞ்சினி உட்பட திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.குறிப்பாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்களின் தேவையினை முழுமையாக நிறைவேற்றுவதாக இருப்பதுடன் மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படாமல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டன.இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள்,வைத்தியசாலையின் பரப்பளவினை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் எம்ஆர்ஐ ஸ்கனர் உட்பட அவசியமான இயந்திரங்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில் அவசர தேவை கருதி அவற்றினை முன்னிலை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உட்பட அதன் செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் மேலும் வினைத்திறனாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது மாநகரசபையின் ஆணையாளரினால் உறுதியளிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பினையும் இதன்போது கோரியிருந்தார்.மழை காலங்களில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.அத்துடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொது அமைப்புகளும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement