• Nov 17 2024

அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் - தடுப்பூசி திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Chithra / Nov 9th 2024, 9:07 am
image


12 மாவட்டங்களை மையப்படுத்தி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார்.

இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தட்டம்மை தடுப்பூசி மருந்தை அருகில் உள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தில் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.  

9 வயது முதல் 19 வயது வரையிலான தட்டம்மை தடுப்பூசியை முறையாகப் பெற்றவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற முடியும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.  

நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இலங்கையில் பதிவான தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆகும் எனவும்  மருத்துவர் குறிப்பிட்டார்.   


அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் - தடுப்பூசி திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு 12 மாவட்டங்களை மையப்படுத்தி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார்.இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தட்டம்மை தடுப்பூசி மருந்தை அருகில் உள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தில் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.  9 வயது முதல் 19 வயது வரையிலான தட்டம்மை தடுப்பூசியை முறையாகப் பெற்றவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற முடியும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.  நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இதையடுத்து, தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு மே மாதம் முதல் இலங்கையில் பதிவான தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆகும் எனவும்  மருத்துவர் குறிப்பிட்டார்.   

Advertisement

Advertisement

Advertisement