நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்பொழுது இந்த நாட்டிலே ஊடக சுதந்திரம் மோசமான முறையிலே பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க சென்ற பொழுது மக்கள் கூக்குரலிட்டு அவரை வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வுகள் ஊடகங்களில் வெளி வருவது தடுக்கப்படுகிறது. பிரைஜைகளுக்கான ஊடக சுதந்திரம் பாரியளவில் மோசமான முறையிலே பல புதிய சட்டங்களை உருவாக்கி நசுக்கப்படுகிறது.
இவ்வாறன விடயங்கள் ஊடாக பார்க்கும் பொழுது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் நெருங்கி வரும் பொழுது இந்த ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதால் பாரியளவில் தேர்தல்களில் பல ஊழல் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் தென் படுகிறது. எனவே ஊடக சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். புதிய புதிய சட்டங்கள் கொண்டுவந்து இந்த ஊடகங்கள் நசுக்கப்படுவது பாரியளவில் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஊடக சுதந்திரம் மோசமான முறையில் நசுக்கப்படுகிறது - பிரபா கணேசன்.samugammedia நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின் போதை அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பொழுது இந்த நாட்டிலே ஊடக சுதந்திரம் மோசமான முறையிலே பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க சென்ற பொழுது மக்கள் கூக்குரலிட்டு அவரை வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வுகள் ஊடகங்களில் வெளி வருவது தடுக்கப்படுகிறது. பிரைஜைகளுக்கான ஊடக சுதந்திரம் பாரியளவில் மோசமான முறையிலே பல புதிய சட்டங்களை உருவாக்கி நசுக்கப்படுகிறது. இவ்வாறன விடயங்கள் ஊடாக பார்க்கும் பொழுது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் நெருங்கி வரும் பொழுது இந்த ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதால் பாரியளவில் தேர்தல்களில் பல ஊழல் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் தென் படுகிறது. எனவே ஊடக சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். புதிய புதிய சட்டங்கள் கொண்டுவந்து இந்த ஊடகங்கள் நசுக்கப்படுவது பாரியளவில் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.