• May 06 2024

எமது நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான சக்தி ஊடகங்களே - சபையில் மஹ்ரூப் எம்.பி.சூளுரை...!samugammedia

Tharun / Dec 9th 2023, 12:37 pm
image

Advertisement

ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு சிறந்த முறையிலே ஊடகத்தை வழிநடாத்தி செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

இன்றைய உலகின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சக்தியாக இன்று ஊடங்கள் காணப்படுகின்றன. நவீன காலத்தில் வெகுசன ஊடகங்கள் கைகளுக்குள் வந்திருக்கின்றன. இதனால் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் முனைகிறார்கள். 

பல சட்டங்கள் இருந்த போதிலும் புதிய ஊடக சட்டங்களை கொண்டு வந்து ஊடகவியலாளர்களை நசுக்குவற்கு அரசு ஈடுபடுகிறது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஊடங்கள் என்பது நடுநிலையாக செயற்பட வேண்டும். நடுநிலையாக நின்று செய்திகளை வெளியிட வேண்டும். 

நமது நாட்டிலே பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பாகவும், இனவாதத்தை தூண்டுகின்ற விதமாகவும் இன்று செயல்படுவது கவலைக்குரிய விடயமாகும்.  இன்றைய ஊடகங்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு எவ்வாறு செயட்பட்டார்கள்  என்பதை நாங்கள் பார்த்தோம். இன்றைய கால கட்டத்தில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஆட்சியை கொண்டு வருவதற்காக  நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

இன்று சில ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சி நிரல் மூலம் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சில ஊடகவியலாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக ஊடகங்களை ஆரம்பிக்கின்றார்கள். மேலும் சிலர் அரசியலுக்காக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே எவ்வாறான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு சிறந்த முறையிலே ஊடகத்தை வழிநடாத்தி செல்ல வேண்டும். நாட்டை சீர் படுத்த அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் போதாது. இவ்வாறான பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஒத்துழைப்பு வழங்கும் போது தான் நாடு சிறந்த நிலையை அடையும். என மேலும் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான சக்தி ஊடகங்களே - சபையில் மஹ்ரூப் எம்.பி.சூளுரை.samugammedia ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு சிறந்த முறையிலே ஊடகத்தை வழிநடாத்தி செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய உலகின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சக்தியாக இன்று ஊடங்கள் காணப்படுகின்றன. நவீன காலத்தில் வெகுசன ஊடகங்கள் கைகளுக்குள் வந்திருக்கின்றன. இதனால் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் முனைகிறார்கள். பல சட்டங்கள் இருந்த போதிலும் புதிய ஊடக சட்டங்களை கொண்டு வந்து ஊடகவியலாளர்களை நசுக்குவற்கு அரசு ஈடுபடுகிறது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஊடங்கள் என்பது நடுநிலையாக செயற்பட வேண்டும். நடுநிலையாக நின்று செய்திகளை வெளியிட வேண்டும். நமது நாட்டிலே பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பாகவும், இனவாதத்தை தூண்டுகின்ற விதமாகவும் இன்று செயல்படுவது கவலைக்குரிய விடயமாகும்.  இன்றைய ஊடகங்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு எவ்வாறு செயட்பட்டார்கள்  என்பதை நாங்கள் பார்த்தோம். இன்றைய கால கட்டத்தில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஆட்சியை கொண்டு வருவதற்காக  நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று சில ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சி நிரல் மூலம் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சில ஊடகவியலாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக ஊடகங்களை ஆரம்பிக்கின்றார்கள். மேலும் சிலர் அரசியலுக்காக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே எவ்வாறான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு சிறந்த முறையிலே ஊடகத்தை வழிநடாத்தி செல்ல வேண்டும். நாட்டை சீர் படுத்த அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டும் போதாது. இவ்வாறான பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஒத்துழைப்பு வழங்கும் போது தான் நாடு சிறந்த நிலையை அடையும். என மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement