• Dec 14 2024

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு...!

Sharmi / May 24th 2024, 3:25 pm
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதியானது  இன்றையதினம்(24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் விஜயமாக இன்றையதினம்(24) வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதியானது  இன்றையதினம்(24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் விஜயமாக இன்றையதினம்(24) வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement