மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அனர்த்த காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், மீன்பிடிச் சட்டம் மற்றும் மீன்பிடிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் அமைச்சருக்கும், மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான மீனவப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், அனர்த்த காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், மீன்பிடிச் சட்டம் மற்றும் மீன்பிடிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.