• Jan 13 2025

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே சந்திப்பு!

Chithra / Jan 3rd 2025, 7:50 am
image

 

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. 

வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளரால், திணைக்கள ரீதியான செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பான தேவைப்பாடுகள், வைத்திய அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.

குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு மாவட்டங்களில் காணப்படும் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதற்கு ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை உள்வாங்குதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

ஆயுள்வேத வைத்தியர்களின் இடமாற்றம், வைத்தியர்களின் தற்காலிக இணைப்பு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என சங்கத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

மேலும், ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களின் தரப்படுத்தல் தொடர்பான கோரிக்கையை சாதகமான முறையில் அணுமாறு ஆளுநர் ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். 

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். 


அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே சந்திப்பு  அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளரால், திணைக்கள ரீதியான செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பான தேவைப்பாடுகள், வைத்திய அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு மாவட்டங்களில் காணப்படும் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதற்கு ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை உள்வாங்குதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.ஆயுள்வேத வைத்தியர்களின் இடமாற்றம், வைத்தியர்களின் தற்காலிக இணைப்பு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என சங்கத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களின் தரப்படுத்தல் தொடர்பான கோரிக்கையை சாதகமான முறையில் அணுமாறு ஆளுநர் ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement