• Jan 05 2025

காற்றாலை திட்டத்திற்காக பலன் தரும் மரங்கள் அழிப்பு - மன்னார் மக்கள் கடும் எதிர்ப்பு

Chithra / Jan 3rd 2025, 8:00 am
image


மன்னார் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட  தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கு கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டு மண் வீதியில் போடப்பட்டமையினால் நேற்று (2) மதியம் குறித்த பகுதியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தாழ்வுபாடு  கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகளில் மணல்கள் எடுக்கப்பட்டு, வீதியின் அருகில் போடப்பட்டுள்ளமை தொடர்பில், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அருட்தந்தையர்களின் கவனத்திற்கு நேற்று மதியம்  தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு, உடனடியாக குறித்த வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்தார்.

குறித்த பகுதியில்  மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரை மணல் திட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் அகழப்பட்டு, வீதிக்கு அருகில் போடப்பட்டுள்ள நிலையில் அதிருப்திக்குள்ளான கிராமத்தவர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர், மன்னார் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு, குறித்த வேலைத்திட்டமும் இடைநிறுத்தப்பட்டது.


காற்றாலை திட்டத்திற்காக பலன் தரும் மரங்கள் அழிப்பு - மன்னார் மக்கள் கடும் எதிர்ப்பு மன்னார் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட  தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கு கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டு மண் வீதியில் போடப்பட்டமையினால் நேற்று (2) மதியம் குறித்த பகுதியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தாழ்வுபாடு  கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகளில் மணல்கள் எடுக்கப்பட்டு, வீதியின் அருகில் போடப்பட்டுள்ளமை தொடர்பில், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அருட்தந்தையர்களின் கவனத்திற்கு நேற்று மதியம்  தெரியப்படுத்தினர்.இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு, உடனடியாக குறித்த வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியுள்ளனர்.இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்தார்.குறித்த பகுதியில்  மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரை மணல் திட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் அகழப்பட்டு, வீதிக்கு அருகில் போடப்பட்டுள்ள நிலையில் அதிருப்திக்குள்ளான கிராமத்தவர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர், மன்னார் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இந்த நிலையில் அங்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு, குறித்த வேலைத்திட்டமும் இடைநிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement