• Jan 05 2025

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்; நகர அபிவிருத்தி அதிகாரசபை பொலிஸாரிடம் முறைப்பாடு!

Chithra / Jan 3rd 2025, 8:03 am
image

 


நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளரால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 13ம்திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஒரு சிலரால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் இக் குற்றச்சாட்டுக்கள் ஒரு சிலரது முகநூலில் இணைத்து பகிரப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்; நகர அபிவிருத்தி அதிகாரசபை பொலிஸாரிடம் முறைப்பாடு  நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளரால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 13ம்திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஒரு சிலரால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் இக் குற்றச்சாட்டுக்கள் ஒரு சிலரது முகநூலில் இணைத்து பகிரப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement