• Jan 05 2025

முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி

Chithra / Jan 3rd 2025, 8:05 am
image

 

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் இன்று (03) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன்னும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் தொன்னும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற்சாலைகளின் தேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி  இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல் இன்று (03) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன்னும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் தொன்னும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற்சாலைகளின் தேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement