எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரியந்த குமார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம, கட்சியின் பிரதித் தலைவர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் கட்சி போட்டியிடவுள்ளமை தொடர்பாகவும், கட்சியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரியந்த குமார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம, கட்சியின் பிரதித் தலைவர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் கட்சி போட்டியிடவுள்ளமை தொடர்பாகவும், கட்சியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.