• Sep 20 2024

வலிகாமம் வடக்கு வசாவிளானில் மக்களின் காணியில் இராணுவ வைத்தியசாலை – தொடரும் ஆக்கிரமிப்புக்கள்.! samugammedia

Tamil nila / May 6th 2023, 5:09 pm
image

Advertisement

வலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வரவதாக வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ச.சஜிவன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில்  கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது. 

இதில் 8 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களின் காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறியிருந்தேன்  கடந்த ஒருவருடமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

பிரதேச சபையால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாது இருந்துள்ளது. தற்போது தையிட்டி விகாரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். 

 அதேபோல் வசாவிளான் பகுதியில் அமைக்கப்படுகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

எனவே இனியாவது காணிகளை விடுவிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் அனுமதியின்றியும்  பொதுமக்களின் காணிகளில் கட்டப்பட்டு வருகின்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வலிகாமம் வடக்கு வசாவிளானில் மக்களின் காணியில் இராணுவ வைத்தியசாலை – தொடரும் ஆக்கிரமிப்புக்கள். samugammedia வலிகாமம் வடக்கு வசாவிளன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வரவதாக வலிவடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ச.சஜிவன் தெரிவித்துள்ளார்.வலி வடக்கு தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் பிரதேச சபைக்கூட்டத்தில்  கலந்துரையாடி அதனை நிறுத்த வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது.அதேபோல் வசாவிளான் பகுதியில் 245 கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ வைத்தியசாலை கட்டப்பட்டு வருகின்றது. இதில் 8 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களின் காணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறியிருந்தேன்  கடந்த ஒருவருடமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பிரதேச சபையால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாது இருந்துள்ளது. தற்போது தையிட்டி விகாரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.  அதேபோல் வசாவிளான் பகுதியில் அமைக்கப்படுகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே இனியாவது காணிகளை விடுவிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் அனுமதியின்றியும்  பொதுமக்களின் காணிகளில் கட்டப்பட்டு வருகின்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் நிறுத்துவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement