தேசிய ரீதியில் இடம்பெற்ற மைலோ(MILO) கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு 12 வயது பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மன்- வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் .F.X. அன்ரன் சேவியர் தலைமையில் பாடசாலை சமூகத்தால் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் D.C. அரவிந்தராஜ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த தோடு மாந்தை கோட்டக்கல்விப் பணிப்பாளர் , ஆசிரிய ஆலோசகர், அயல் பாடசாலை அதிபர் ,கிராம அலுவலர், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டி- மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட வட்டக்கண்டல் பாடசாலை மாணவர்கள். தேசிய ரீதியில் இடம்பெற்ற மைலோ(MILO) கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு 12 வயது பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மன்- வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.பாடசாலையின் அதிபர் .F.X. அன்ரன் சேவியர் தலைமையில் பாடசாலை சமூகத்தால் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் D.C. அரவிந்தராஜ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த தோடு மாந்தை கோட்டக்கல்விப் பணிப்பாளர் , ஆசிரிய ஆலோசகர், அயல் பாடசாலை அதிபர் ,கிராம அலுவலர், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.