• Jul 08 2024

மட்டு.வாகரையில் மழையுடன் மினி சூறாவளி - தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்

Chithra / Jul 5th 2024, 7:45 am
image

Advertisement

 

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.

பலத்த காற்றினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன்,

வீடுகளில் இருந்தவர்கள் காயம் ஏதுவுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று திடீரென மழை பெய்ததுடன், மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து பிரதேசத்திலுள்ள பல மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வீடுகளின் கூரை ஒடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டுள்ளன.


மட்டு.வாகரையில் மழையுடன் மினி சூறாவளி - தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்  மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.பலத்த காற்றினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன்,வீடுகளில் இருந்தவர்கள் காயம் ஏதுவுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.சீரற்ற காலநிலையினையடுத்து நேற்று திடீரென மழை பெய்ததுடன், மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து பிரதேசத்திலுள்ள பல மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வீடுகளின் கூரை ஒடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement