• Jul 08 2024

சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை - பரிதாபமாக உயிரிழந்த 2 மாத சிசு!

Chithra / Jul 5th 2024, 7:47 am
image

Advertisement

 

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததையடுத்து, குழந்தையை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரின் 2 மாதம் 27 நாட்களேயான இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தைக்கு நேற்றுமுன்தினம் (03) காலை பால் கொடுக்கப்பட்ட போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர் உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை கொட்வில பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என்றும் அதனால் குழந்தையை சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

பின்னர் குழந்தையை நோயாளர் காவு வண்டியில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதற்குள் குழந்தை இறந்துவிட்டதாகவும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து   மாத்தறை பொது மயானத்தில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.


சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை - பரிதாபமாக உயிரிழந்த 2 மாத சிசு  மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததையடுத்து, குழந்தையை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரின் 2 மாதம் 27 நாட்களேயான இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இந்த குழந்தைக்கு நேற்றுமுன்தினம் (03) காலை பால் கொடுக்கப்பட்ட போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பெற்றோர் உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை கொட்வில பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என்றும் அதனால் குழந்தையை சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.பின்னர் குழந்தையை நோயாளர் காவு வண்டியில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.பின்னர் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அதற்குள் குழந்தை இறந்துவிட்டதாகவும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து   மாத்தறை பொது மயானத்தில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement