• Nov 28 2024

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Chithra / Jun 9th 2024, 9:06 am
image

 

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே காணப்படுவதாகவும்,

அத்தொகை போதுமானது அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுக்கும்புற, வாய்மொழி மூலமாகக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

நுகர்வோர் சட்டம் 20 வருடங்களாக திருத்தப்படவில்லை என்றும்,

தற்போது காணப்படும் சட்டத்தை மாற்றி அமைத்து அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு சட்டமா அதிபருக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே காணப்படுவதாகவும்,அத்தொகை போதுமானது அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுக்கும்புற, வாய்மொழி மூலமாகக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.நுகர்வோர் சட்டம் 20 வருடங்களாக திருத்தப்படவில்லை என்றும்,தற்போது காணப்படும் சட்டத்தை மாற்றி அமைத்து அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு சட்டமா அதிபருக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்

Advertisement

Advertisement

Advertisement