நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 மெகாவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்து, எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படாது – அமைச்சர் உறுதி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 மெகாவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்து, எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.