• Sep 19 2024

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்..! முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 2:28 pm
image

Advertisement

கிளிநொச்சி கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு தானியப் பயிர் செய்கைக்கான விதைகளை மானிய அடிப்படையில் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சர் தானிய விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

அதேபோன்று, நெல்லுக்கான விலை என்பது நாடளாவிய பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், அதுதொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் ஒரு தீர்மானம் மேற்கொள்ப்படும் எனவும், தற்காலிகமாக தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஒரு கிலோ நெல்லை 80 ரூபாய் வீதம் கொள்வனவு செய்வதற்கு விவசாய  அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ். முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு.samugammedia கிளிநொச்சி கோணாவில், யூனியன் குளம் பகுதி இளைஞர்களை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.குறிப்பாக நெல் சிறுபோக அறுவடைக்கு தயாராகவுள்ள நிலையில் நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயம் செய்து தருமாறும், சிறு தானியப் பயிர் செய்கைக்கான விதைகளை மானிய அடிப்படையில் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அமைச்சர் தானிய விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.அதேபோன்று, நெல்லுக்கான விலை என்பது நாடளாவிய பிரச்சினையாக இருக்கின்ற நிலையில், அதுதொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் ஒரு தீர்மானம் மேற்கொள்ப்படும் எனவும், தற்காலிகமாக தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஒரு கிலோ நெல்லை 80 ரூபாய் வீதம் கொள்வனவு செய்வதற்கு விவசாய  அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement