• Nov 25 2024

மன்னார் பள்ளி முனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Tamil nila / Aug 24th 2024, 7:34 pm
image

மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை (24)  விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.


இதன் போது பள்ளிமுனை கடற்கரை  இறங்குதுறை க்குச் சென்று அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை  ஆழப்படுத்தும்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்வையிட்டார்.



கடல் வற்று நேரங்களில் தமது இறங்குதுறை பகுதியில் படகுகளை உட் கொண்டு வருவதில் ஏற்படும் சிரமங்களை போக்க சுமார் 700 மீட்டர் தூரத்தை ஆளப்படுத்தி தூர்வாரி தருமாறு  மன்னார் பள்ளிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட உடன் நடவடிக்கையின் பிரகாரம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் தூர்வாரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் நிலைமைகளை அவதானித்த துடன்  குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆழப்படுத்தும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

இந்த நிலையில் கிராமிய கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் பள்ளி முனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை (24)  விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.இதன் போது பள்ளிமுனை கடற்கரை  இறங்குதுறை க்குச் சென்று அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை  ஆழப்படுத்தும்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்வையிட்டார்.கடல் வற்று நேரங்களில் தமது இறங்குதுறை பகுதியில் படகுகளை உட் கொண்டு வருவதில் ஏற்படும் சிரமங்களை போக்க சுமார் 700 மீட்டர் தூரத்தை ஆளப்படுத்தி தூர்வாரி தருமாறு  மன்னார் பள்ளிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட உடன் நடவடிக்கையின் பிரகாரம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் தூர்வாரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் நிலைமைகளை அவதானித்த துடன்  குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆழப்படுத்தும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.இந்த நிலையில் கிராமிய கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement