• Nov 24 2024

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Feb 21st 2024, 4:11 pm
image

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

 இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும்.

கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் மாதத்தில் அரச நிறுவனங்களின் மின்கட்டணம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு. கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில்  இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும்.கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அக்டோபர் மாதத்தில் அரச நிறுவனங்களின் மின்கட்டணம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின் பிரகாரம் அத்தொகையும் குறைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement