இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உத்தர கண்டம் மாநிலத்தை சேர்ந்த சுவாமி கைலாஷ் நந்து ஜி ஹரிக்வார் மற்றும் மோக்ஷா டிரஸ்ட் நிறுவனத்தின் பிரதானிகளும் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்து பேச்சு நடத்தினர்.
பின்னர் அமைச்சருடன் இணைந்து இக்குழுவினர் நுவரெலியா சீதாஎலியவில் உள்ள சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்தின் வரலாறு, தொன்மை பற்றியும் கேட்டறிந்தனர்.
பிறகு இறம் பொடையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற மேற்படி குழுவினர் இங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஆன்மீகம் சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதன் அவசியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.
அதேவேளை, அமைச்சரின் முக்கிய குழுவினருடன் இணைந்து கண்டி, தலதா மாளிகைக்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட இந்த குழுவினர் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரரை சந்தித்து ஆசிபெற்றனர்.
இதன் போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.செல்லமுத்து, அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் என பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.
இலங்கை- இந்தியா இடையிலான ஆன்மீக உறவுகளை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உத்தர கண்டம் மாநிலத்தை சேர்ந்த சுவாமி கைலாஷ் நந்து ஜி ஹரிக்வார் மற்றும் மோக்ஷா டிரஸ்ட் நிறுவனத்தின் பிரதானிகளும் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்து பேச்சு நடத்தினர்.பின்னர் அமைச்சருடன் இணைந்து இக்குழுவினர் நுவரெலியா சீதாஎலியவில் உள்ள சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்தின் வரலாறு, தொன்மை பற்றியும் கேட்டறிந்தனர்.பிறகு இறம் பொடையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற மேற்படி குழுவினர் இங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஆன்மீகம் சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதன் அவசியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.அதேவேளை, அமைச்சரின் முக்கிய குழுவினருடன் இணைந்து கண்டி, தலதா மாளிகைக்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட இந்த குழுவினர் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரரை சந்தித்து ஆசிபெற்றனர்.இதன் போது, அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.செல்லமுத்து, அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் என பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.