நில்வள நதியை சுற்றுலா மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆய்வுப் பயணத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அவர் தலைமையிலான மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு விரைவான தீர்வு காண்பது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
இதன்போது தொழில்நுட்பக் குழு மூலம் வெள்ளப் பிரச்னைக்கு விரைவான தீர்வு காணல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு நில்வள கங்கையைப் பயன்படுத்துதல், நில்வள ஆற்றின் ஊடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி, அக்குரஸ்ஸ ஊடாக சிங்கராஜா வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து, ஆற்றின் கரைகள் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ஆய்வு நில்வள நதியை சுற்றுலா மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆய்வுப் பயணத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஈடுபட்டுள்ளார். அதன்படி, நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அவர் தலைமையிலான மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு விரைவான தீர்வு காண்பது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.இதன்போது தொழில்நுட்பக் குழு மூலம் வெள்ளப் பிரச்னைக்கு விரைவான தீர்வு காணல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு நில்வள கங்கையைப் பயன்படுத்துதல், நில்வள ஆற்றின் ஊடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி, அக்குரஸ்ஸ ஊடாக சிங்கராஜா வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து, ஆற்றின் கரைகள் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.