• Nov 25 2024

மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்துக்கு அமைச்சர் ஜீவன் கண்டனம்...!

Sharmi / Feb 22nd 2024, 1:10 pm
image

கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு,  தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் நொயல் பிரியந்த தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் இன்று கையளித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான், வன்மையாகக் கண்டித்ததுடன், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சனவிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர், ஊடகப்பேச்சாளர் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்துள்ளார்.



 

மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்துக்கு அமைச்சர் ஜீவன் கண்டனம். கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு,  தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் நொயல் பிரியந்த தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் இன்று கையளித்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில், மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான், வன்மையாகக் கண்டித்ததுடன், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.அத்துடன், இவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சனவிடம் வலியுறுத்தியிருந்தார்.இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர், ஊடகப்பேச்சாளர் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement