• Dec 09 2024

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்க யாழ் பல்கலை மாணவர்கள் தீர்மானம்...!

Sharmi / Feb 22nd 2024, 12:58 pm
image

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர்.

விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பாக, நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பபட்டிருந்தது.

அக்கடிதத்தில், இன்று நண்பகலுக்குள் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்க யாழ் பல்கலை மாணவர்கள் தீர்மானம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர்.விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் தொடர்பாக, நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பபட்டிருந்தது.அக்கடிதத்தில், இன்று நண்பகலுக்குள் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement