• Jan 16 2026

இளம் வயதினரிடையே திடீரென அதிகரிக்கும் இதய அறுவை சிகிச்சை

Chithra / Jan 15th 2026, 9:09 pm
image

 

இதய அறுவை சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

விசேட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நாலக திசாநாயக்க, ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சிகிச்சை பெறுபவர்களில் கணிசமானோர் இளம் வயதினர். உலகளவில் நடுத்தர வயதுக்குட்பட்டோரில் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை மாரடைப்பால் ஏற்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தநிலையில், இதய நோயை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி, உரிய உணவுமுறை, மன அழுத்த முகாமைத்துவம் மற்றும் இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மிக அவசியம் எனவும் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நாலக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இளம் வயதினரிடையே திடீரென அதிகரிக்கும் இதய அறுவை சிகிச்சை  இதய அறுவை சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விசேட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நாலக திசாநாயக்க, ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சிகிச்சை பெறுபவர்களில் கணிசமானோர் இளம் வயதினர். உலகளவில் நடுத்தர வயதுக்குட்பட்டோரில் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை மாரடைப்பால் ஏற்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில், இதய நோயை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி, உரிய உணவுமுறை, மன அழுத்த முகாமைத்துவம் மற்றும் இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை மிக அவசியம் எனவும் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நாலக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement