வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் (ஐயனார் கோயில்) முன்றலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை அவர் ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.றஜீவன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
யாழ். வந்திறங்கிய ஜனாதிபதி அநுர; பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிப்பு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் (ஐயனார் கோயில்) முன்றலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை அவர் ஆரம்பித்து வைத்தார்.வடக்கு மாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், வேலணைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.றஜீவன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.