ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போன சம்பவத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கர்னல் எராந்த ரதீஷ் பேரிஸின் பதவி உயர்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அவரை, பிரிகேடியராக பதவி உயர்த்தியதை எதிர்த்து ஊடக சுதந்திர அமைப்புகள் மற்றும் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த பதவி உயர்வு நீதித்துறை செயல்முறையை பாதிக்கக் கூடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என சிவில் சமூக அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
எக்னெலிகொட காணாமல்போன சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வு: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போன சம்பவத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கர்னல் எராந்த ரதீஷ் பேரிஸின் பதவி உயர்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அவரை, பிரிகேடியராக பதவி உயர்த்தியதை எதிர்த்து ஊடக சுதந்திர அமைப்புகள் மற்றும் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த விடயம் குறித்து எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த பதவி உயர்வு நீதித்துறை செயல்முறையை பாதிக்கக் கூடும் என எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என சிவில் சமூக அமைப்புகளும் தெரிவித்துள்ளன.