• Jan 16 2026

காரைக்கால் மீனவர்களை சுற்றிவளைத்து பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் - நடுக்கடலில் பரபரப்பு

Chithra / Jan 16th 2026, 9:54 am
image

 நாட்டுப்படகுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 14 பேர் ஒரு விசைப்படகுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,


காரைக்கால் மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் மீன்பிடிப்பது மற்றும் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் ஏனைய தமிழக மீனவர்கள் பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்துள்ளது. 


காரைக்கால் மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் சிறிய மீனவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கரைக்கு அண்ணளவாக வந்து அதிகளவான மீன்களை பிடித்துச் செல்வதையும் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. 


இந்நிலையில் கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி கடற்பரப்புக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் விசைப்படகு மற்றும் அதில் இருந்த 14 மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து இன்று (16) அதிகாலை இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்


மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


காரைக்கால் மீனவர்களை சுற்றிவளைத்து பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் - நடுக்கடலில் பரபரப்பு  நாட்டுப்படகுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 14 பேர் ஒரு விசைப்படகுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,காரைக்கால் மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் மீன்பிடிப்பது மற்றும் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் ஏனைய தமிழக மீனவர்கள் பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்துள்ளது. காரைக்கால் மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் சிறிய மீனவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கரைக்கு அண்ணளவாக வந்து அதிகளவான மீன்களை பிடித்துச் செல்வதையும் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி கடற்பரப்புக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் விசைப்படகு மற்றும் அதில் இருந்த 14 மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து இன்று (16) அதிகாலை இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement