• Aug 18 2025

ஊழல் விசாரணைக்குள் சிக்கவுள்ள அநுர அரசின் அமைச்சர்

Chithra / Aug 17th 2025, 9:03 am
image

 

வலுச்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்கு உட்படுத்த தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.   

2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் குமார ஜெயக்கொடி பணியாற்றிய போது நிதியை முறைகேடாக பயன்படுத்தியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமைக்கு அமைய விசாரணைகளை ஆரம்பிக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியாக அமைச்சர் உட்பட மேலும் இருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமைச்சர் குமார ஜெயக்கொடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ஊழல் விசாரணைக்குள் சிக்கவுள்ள அநுர அரசின் அமைச்சர்  வலுச்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்கு உட்படுத்த தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.   2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் குமார ஜெயக்கொடி பணியாற்றிய போது நிதியை முறைகேடாக பயன்படுத்தியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமைக்கு அமைய விசாரணைகளை ஆரம்பிக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியாக அமைச்சர் உட்பட மேலும் இருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமைச்சர் குமார ஜெயக்கொடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement