• Sep 20 2024

சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை samugammedia

Chithra / Apr 4th 2023, 6:23 pm
image

Advertisement

சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக தெரிவித்தன.

இன்று செவ்வாய்க்கிழமை ள யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.

சுருக்குவலைக்கு  அனுமதி வழங்கப்பட்ட இரண்டே முக்கால் கண் கொண்ட வலையினை பயன்படுத்தாமல் அதற்கு குறைவான கண்கொண்ட வலைகளை பயன்படுத்தி சுருக்கு வலைத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக அதிகளவிலான சிறிய மீன்கள் குறித்த வலைகளில்  அகப்படுவதனால் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதுமட்டுமல்லாது  சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல் டைனமற் அடித்தல் காரணமாக கடல் உயிர் வாழ் உயிரினங்களின்  பல்வகைத் தன்மை அழிவடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அண்மையில்  யார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் பின்னர் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பணிபுரைக்கு அமைய 70வீதமான சட்ட விரோத சுருக்குவலைத் தொழில்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே வடமராட்சி வடக்கு வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு  அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை samugammedia சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தொடர்ச்சியாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக தெரிவித்தன.இன்று செவ்வாய்க்கிழமை ள யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.சுருக்குவலைக்கு  அனுமதி வழங்கப்பட்ட இரண்டே முக்கால் கண் கொண்ட வலையினை பயன்படுத்தாமல் அதற்கு குறைவான கண்கொண்ட வலைகளை பயன்படுத்தி சுருக்கு வலைத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது.இதன் காரணமாக அதிகளவிலான சிறிய மீன்கள் குறித்த வலைகளில்  அகப்படுவதனால் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை.அதுமட்டுமல்லாது  சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல் டைனமற் அடித்தல் காரணமாக கடல் உயிர் வாழ் உயிரினங்களின்  பல்வகைத் தன்மை அழிவடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.அண்மையில்  யார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் பின்னர் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.இந்நிலையில் அமைச்சரின் பணிபுரைக்கு அமைய 70வீதமான சட்ட விரோத சுருக்குவலைத் தொழில்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.ஆகவே வடமராட்சி வடக்கு வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு  அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement