2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு இடைக்கால தரநிலைக் கணக்கைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த இடைக்கால தரக் கணக்கு விவாதம் நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இது நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டு அரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு இடைக்கால தரநிலைக் கணக்கைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அத்துடன், நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த இடைக்கால தரக் கணக்கு விவாதம் நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இது நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டு அரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்