• Oct 30 2024

சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை குறித்து அமைச்சரின் அறிவிப்பு!

Chithra / Oct 27th 2024, 7:41 am
image

Advertisement


அறுகம்பை பிரதேசத்திலுள்ள சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

கிரிபத்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவத்தின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

கிடைக்கப் பெற்ற தகவல் உண்மையானதா? போலியானதா? என ஆராயப்பட வேண்டும். 

அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

சுற்றுலாப் பயணிகள் வழமை போலவே நாட்டிற்கு வருகை தருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை குறித்து அமைச்சரின் அறிவிப்பு அறுகம்பை பிரதேசத்திலுள்ள சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கிரிபத்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கிடைக்கப் பெற்ற தகவல் உண்மையானதா போலியானதா என ஆராயப்பட வேண்டும். அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. சுற்றுலாப் பயணிகள் வழமை போலவே நாட்டிற்கு வருகை தருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement