நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மறுசீரமைத்து, முழுமையான புலனாய்வுப் பிரிவாக மீண்டும் நிறுவுவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஒரு பணிப்பாளரின் கீழ் தனி புலனாய்வு பிரிவாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நிதிக் குற்றப்பிரிவு என்பது குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பது கடினமான பணியாக இருப்பதால், நிதிக் குற்றப் பிரிவு மற்றுமொரு பிரிவாக மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றப் பிரிவினூடாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மறுசீரமைத்து, முழுமையான புலனாய்வுப் பிரிவாக மீண்டும் நிறுவுவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஒரு பணிப்பாளரின் கீழ் தனி புலனாய்வு பிரிவாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, நிதிக் குற்றப்பிரிவு என்பது குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பது கடினமான பணியாக இருப்பதால், நிதிக் குற்றப் பிரிவு மற்றுமொரு பிரிவாக மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது.கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றப் பிரிவினூடாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.