• Nov 22 2024

பாடசாலை மதிய உணவுத் திட்டம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Chithra / Oct 8th 2024, 11:36 am
image

 

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு  அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கைகள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement