• Apr 02 2025

காணாமல்போன யுவதி நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு!

Chithra / Apr 1st 2025, 1:28 pm
image

 

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) முதல் காணாமல்போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் டயகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்த யுவதி உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டாரா என்பது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது மேலதிக விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


காணாமல்போன யுவதி நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு  தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) முதல் காணாமல்போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் டயகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த யுவதி உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டாரா என்பது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.சடலமானது மேலதிக விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement