காணாமற்போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார
செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறியுள்ளார்
மேலும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முழுமையாக சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
அரச நிதியுடன் செயல்பட்டாலும், இது எந்தவொரு இராணுவ பிரிவு, பொலிஸார் அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழு எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து, தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.
தற்போது மக்கள் மத்தியில் OMP-யின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளதால், மாவட்ட மட்ட அமர்வுகளுக்கு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி உண்மையை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனவர்கள் விவகாரம் – 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு காணாமற்போன ஆட்கள் தொடர்பாக 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளாரசெம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறியுள்ளார்மேலும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டாரகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முழுமையாக சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்அரச நிதியுடன் செயல்பட்டாலும், இது எந்தவொரு இராணுவ பிரிவு, பொலிஸார் அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழு எனவும் அவர் வலியுறுத்தினார்.பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து, தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.தற்போது மக்கள் மத்தியில் OMP-யின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளதால், மாவட்ட மட்ட அமர்வுகளுக்கு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், 85க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வந்து சாட்சியங்களையும் தகவல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி உண்மையை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.