• Jul 27 2025

காணாமல் போன பணப்பை: உரியவரிடம் ஒப்படைத்த நல்லுள்ளம்- நேர்மைக்கு குவியும் பாராட்டு!

Thansita / Jul 27th 2025, 8:58 am
image

காணாமல் போனவரின் பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் 

தோப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் எம். அர்ஹமின்  என்பவர் கிண்ணியாவிலிருந்து மூதூர் வழியாக வீடு திரும்பும்போது பாதையில் அவரது பணப்பை காணாமல் போயிருந்தது. 

இவ் பணப்பையில் 27.000 ரூபாய் பணம், சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, ATM அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டிருந்தன.


இந்நிலையில்,  மூதூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து சாலை முகாமையாளரான எம். நௌபீல் என்பவர் அந்தப் பணப்பையை வீதியில் கண்டெடுத்து, நேற்றையதினம்  இரவு உரியவரின் ஊரான தோப்பூரில் வைத்து பணப்பையையும் ஆவணங்களையும் ஒப்படைத்தார்.

பணப்பை கிடைத்த மகிழ்ச்சியில் பணப்பையை கண்டெடுத்த நௌபீல் என்ற நபருக்கு அவர் அன்பளிப்பு வழங்கியபோதும் அவர் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

இதன் பின்னர் கைகுழுக்கி இருவரும் நன்றிகளை பரிமாறிக் கொண்டர்

இந்த காலத்தில் இப்படியும் நல்லுள்ளங்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது


காணாமல் போன பணப்பை: உரியவரிடம் ஒப்படைத்த நல்லுள்ளம்- நேர்மைக்கு குவியும் பாராட்டு காணாமல் போனவரின் பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் தோப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் எம். அர்ஹமின்  என்பவர் கிண்ணியாவிலிருந்து மூதூர் வழியாக வீடு திரும்பும்போது பாதையில் அவரது பணப்பை காணாமல் போயிருந்தது. இவ் பணப்பையில் 27.000 ரூபாய் பணம், சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, ATM அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டிருந்தன.இந்நிலையில்,  மூதூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து சாலை முகாமையாளரான எம். நௌபீல் என்பவர் அந்தப் பணப்பையை வீதியில் கண்டெடுத்து, நேற்றையதினம்  இரவு உரியவரின் ஊரான தோப்பூரில் வைத்து பணப்பையையும் ஆவணங்களையும் ஒப்படைத்தார்.பணப்பை கிடைத்த மகிழ்ச்சியில் பணப்பையை கண்டெடுத்த நௌபீல் என்ற நபருக்கு அவர் அன்பளிப்பு வழங்கியபோதும் அவர் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.இதன் பின்னர் கைகுழுக்கி இருவரும் நன்றிகளை பரிமாறிக் கொண்டர்இந்த காலத்தில் இப்படியும் நல்லுள்ளங்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது

Advertisement

Advertisement

Advertisement