• Jul 27 2025

இலங்கையின் ஏற்றுமதித்துறை வருமானம் அதிகரிப்பு - அரசு மகிழ்ச்சி

Chithra / Jul 27th 2025, 6:22 pm
image


2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

இது 2024 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத வளர்ச்சியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,386 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதித்துறை வருமானம் அதிகரிப்பு - அரசு மகிழ்ச்சி 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத வளர்ச்சியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,386 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement