பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சித்தக சிறைக்குள் பயன்படுத்திய மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்குள் இருந்த ஹரக் கட்டா, தற்போதைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது சிறைக்கூடத்திற்குள் இருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதிக்கு மொபைல் போன் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் தற்போதைக்கு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஹரக் கட்டாவிடம் இருந்து மொபைல் போன் கைப்பற்றப்பட்ட சம்பவம் கேள்வியுற்றதும் அவருக்கு எதிராக சாட்சியங்களை அளித்தவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஹரக் கட்டாவிடம் கைத்தொலைபேசி மீட்பு பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சித்தக சிறைக்குள் பயன்படுத்திய மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.நீண்ட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்குள் இருந்த ஹரக் கட்டா, தற்போதைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவரது சிறைக்கூடத்திற்குள் இருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதிக்கு மொபைல் போன் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் தற்போதைக்கு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே ஹரக் கட்டாவிடம் இருந்து மொபைல் போன் கைப்பற்றப்பட்ட சம்பவம் கேள்வியுற்றதும் அவருக்கு எதிராக சாட்சியங்களை அளித்தவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.