• Sep 22 2026

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் ரூ.15 மில்லியன் செலவில் நவீன மலசலகூடத் தொகுதி

dorin / Sep 21st 2026, 10:47 am
image

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி மூலம் சுமார் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட பண்ணை மலசலகூடத் தொகுதியை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் கடந்த (18) நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் பிரதம விருந்தினராகவும், வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் வைத்தியர்.ஜே.விவேகானந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். இருவரும் இணைந்து குறித்த நவீன வசதிகளுடன் கூடிய மலசல கூடத் தொகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது,

இன்றைய நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று  கலந்து கொண்டிருக்கும்  உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்றுக் கொள்கின்றேன்.

மிகவும் முக்கியமான நாள் ஒன்றில் நாம் ஒன்றுகூடியிருக்கின்றோம். இலங்கையில் சுற்றுலாத்தளங்களுக்கான பிரபல்யம் பெற்றதும், அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுமான 10 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணமும் தெரிவு செய்யப்பட்டு அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்கொள்ளும் யாழ்ப்பாணம் மாநகரத்தின் பிரதான மையப் புள்ளியும், எமது சபைக் காலத்தில் மாநகரசபையின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக விரைந்து அபிவிருத்தியடைந்துவரும் பண்ணை கடற்கரை பூங்கா பிரதேசத்தில் இவ்வாறானதொரு மலசலகூடத் தொகுதி அமையப்பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாகும்.

யாழ் மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் வைத்தியர் ஜே.விவேகானந்தன் அவர்களிதும், அவர் சார்ந்த மாகாண பொறுப்பு அதிகாரிகளினதும் ஒத்துழைப்பினால் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இந்த மலசல கூடத்தொகுதி அமைக்கப்பெற்றிருப்பது மாநகரசபைக்கும், யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் நன்மையாகும். இதன் மூலம் யாழ் நகரம், கோட்டை, பண்ணை பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது இயற்கை உபாதைகளை முறையாக சீர்செய்து கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் நம்புகின்றேன். இதற்காக சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழாத்தினருக்கு விசேடமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு பொது மலசல கூட வசதிகள் இன்மையினால் மாநகர பொது நூலகத்தை சுற்றுலாப்பயணிகள் நீண்ட காலமாகவே இயற்கை உபாதை கழிப்பதற்காகவே அதிகம் பயன்படுத்தி வந்தமையினால் நூலக வாசகர்கள், அலுவலர்கள் எதிர்கொண்டு வந்த சிரமங்களுக்கு இன்றுடன் விடுதலை கிடைத்துள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும்.

மேலும் மாநகர சபையின் பல்வேறு பொது மலசல கூடங்களும் பயன்படுத்துவோரின் தொடர்ச்சியான பொறுப்பற்ற செயற்பாடுகள் உள்ளிட்டவையினால் முறையாக பேண முடியாமல் இருக்கின்றது. எனவே இம் மலசலகூடத் தொகுதியின் குத்தகைதாரர்கள் இதனை சிறப்பாக பாதுகாப்பதுடன், தூய்மையாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்படி இத் திட்டத்ததை முழுமையாக நிறைவுறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாநகர ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். நிகழ்வில் முதல்வர் மற்றும் விருந்தினர்களால் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வில் பிரதி முதல்வர், கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், பிரதம கணக்காளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர ஊழியர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் ரூ.15 மில்லியன் செலவில் நவீன மலசலகூடத் தொகுதி மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி மூலம் சுமார் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட பண்ணை மலசலகூடத் தொகுதியை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் கடந்த (18) நடைபெற்றது.இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் பிரதம விருந்தினராகவும், வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் வைத்தியர்.ஜே.விவேகானந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். இருவரும் இணைந்து குறித்த நவீன வசதிகளுடன் கூடிய மலசல கூடத் தொகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்தனர்.நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது,இன்றைய நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று  கலந்து கொண்டிருக்கும்  உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்றுக் கொள்கின்றேன்.மிகவும் முக்கியமான நாள் ஒன்றில் நாம் ஒன்றுகூடியிருக்கின்றோம். இலங்கையில் சுற்றுலாத்தளங்களுக்கான பிரபல்யம் பெற்றதும், அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுமான 10 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணமும் தெரிவு செய்யப்பட்டு அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்கொள்ளும் யாழ்ப்பாணம் மாநகரத்தின் பிரதான மையப் புள்ளியும், எமது சபைக் காலத்தில் மாநகரசபையின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக விரைந்து அபிவிருத்தியடைந்துவரும் பண்ணை கடற்கரை பூங்கா பிரதேசத்தில் இவ்வாறானதொரு மலசலகூடத் தொகுதி அமையப்பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாகும்.யாழ் மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வடக்குமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் வைத்தியர் ஜே.விவேகானந்தன் அவர்களிதும், அவர் சார்ந்த மாகாண பொறுப்பு அதிகாரிகளினதும் ஒத்துழைப்பினால் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இந்த மலசல கூடத்தொகுதி அமைக்கப்பெற்றிருப்பது மாநகரசபைக்கும், யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் நன்மையாகும். இதன் மூலம் யாழ் நகரம், கோட்டை, பண்ணை பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது இயற்கை உபாதைகளை முறையாக சீர்செய்து கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் நம்புகின்றேன். இதற்காக சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழாத்தினருக்கு விசேடமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு பொது மலசல கூட வசதிகள் இன்மையினால் மாநகர பொது நூலகத்தை சுற்றுலாப்பயணிகள் நீண்ட காலமாகவே இயற்கை உபாதை கழிப்பதற்காகவே அதிகம் பயன்படுத்தி வந்தமையினால் நூலக வாசகர்கள், அலுவலர்கள் எதிர்கொண்டு வந்த சிரமங்களுக்கு இன்றுடன் விடுதலை கிடைத்துள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும்.மேலும் மாநகர சபையின் பல்வேறு பொது மலசல கூடங்களும் பயன்படுத்துவோரின் தொடர்ச்சியான பொறுப்பற்ற செயற்பாடுகள் உள்ளிட்டவையினால் முறையாக பேண முடியாமல் இருக்கின்றது. எனவே இம் மலசலகூடத் தொகுதியின் குத்தகைதாரர்கள் இதனை சிறப்பாக பாதுகாப்பதுடன், தூய்மையாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.மேற்படி இத் திட்டத்ததை முழுமையாக நிறைவுறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாநகர ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். நிகழ்வில் முதல்வர் மற்றும் விருந்தினர்களால் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி நிகழ்வில் பிரதி முதல்வர், கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், பிரதம கணக்காளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர ஊழியர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement