ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில், தனது வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த மோடி; அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் புறப்பட்டார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டார்.இந்நிலையில், தனது வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.