• May 13 2024

குரங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை விடுத்துள்ள விஷேட அறிவுறுத்தல்..!!

Tamil nila / Feb 24th 2024, 10:53 pm
image

Advertisement

கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.

இன்று வரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

103 பேர் சிவமோகா, உத்தர கன்னடா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம்  இணைந்து நடத்திய ஆய்வில் தமிழக எல்லையான கர்நாடகாத்தின் மைசூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் கொடிய வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக-கர்நாடக எல்லையில் மாநில சுகாதார மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறை விடுத்துள்ள விஷேட அறிவுறுத்தல். கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.இன்று வரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.103 பேர் சிவமோகா, உத்தர கன்னடா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம்  இணைந்து நடத்திய ஆய்வில் தமிழக எல்லையான கர்நாடகாத்தின் மைசூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் கொடிய வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அண்டை மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக-கர்நாடக எல்லையில் மாநில சுகாதார மற்றும் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement