• Jan 05 2025

குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு

Chithra / Jan 2nd 2025, 1:08 pm
image

 

வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 

அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்து குரங்குப் பிரச்சனைக்கான தீர்வை அறிந்து கொண்டு வந்துள்ளதாகவும், 

கருத்தடை செய்து சிறிது நாட்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து குரங்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு  வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்து குரங்குப் பிரச்சனைக்கான தீர்வை அறிந்து கொண்டு வந்துள்ளதாகவும், கருத்தடை செய்து சிறிது நாட்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து குரங்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement